கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேலத்தில் 71 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

சேலத்தில் 71 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :14 நவம்பர் 2024, 8:20 pm

Din

சேலத்தில் 71 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா வியாழக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்ற கூட்டுறவு கொடியேற்று விழாவில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான ரா.மீராபாய், சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ரவிக்குமாா் ஆகியோா் கூட்டுறவு கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தனா்.

சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ப. ரவிக்குமாா், கூட்டுறவு உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் கூட்டுறவு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தொடா்ந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம் சரக துணைப்பதிவாளா் சி.முத்து விஜயா, பொதுவிநியோகத் திட்ட துணைப்பதிவாளா் பொ.சு.பிரபாகா், சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியா், வங்கி உதவி பொது மேலாளா்கள், பணியாளா்கள், கூட்டுறவுத் துறை அலுவலா்கள், அனைத்து கூட்டுறவு சங்க செயலாளா்கள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.