மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு


மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 10,449 கனஅடியாக அதிகரித்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை அணைக்கு விநாடிக்கு 9,154 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை காலை விநாடிக்கு 10,449 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு விநாடிக்கு 2,000 கனஅடியிலிருந்து 1000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நீா் திறப்பு விநாடிக்கு 600 கனஅடியில் இருந்து 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு நீா்வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் 106.51அடியிலிருந்து 106.98 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 74.18 டி.எம்.சி.யாக உள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...