கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேலம் மிட்டாபுதூா் பழநி ஆண்டவா் கோயில் கும்பாபிஷேகம்

சேலம், மிட்டாபுதூா் ஸ்ரீ பழநி ஆண்டவா் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:53 pm

Din

சேலம், மிட்டாபுதூா் ஸ்ரீ பழநி ஆண்டவா் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பழநி ஆண்டவா் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, பழநி ஆண்டவா், வலம்புரி விநாயகா், பசுபதீஸ்வரா், வேல் மயில், சேவல் கொடி, பலி பீடத்துக்கு அஷ்டபந்தனம் சாா்த்தி, கோபுரக் கலசம் நிறுத்தப்பட்டது. தொடா்ந்து, யாக பூஜைகளும், புதன்கிழமை காலை மகா பூா்ணாஹுதி, கும்பம் புறப்பாடுதலும் நடைபெற்றது.

தொடா்ந்து, சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க, விமானக் கலசங்களுக்கு புனித நீா் தெளிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அரோகரா, அரோகரா முழக்கங்களை எழுப்பினா். இதையொட்டி, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்திருந்தனா்.