சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஆண்களுக்கு நவீன கருத்தடை சிகிச்சை முகாம் தொடக்கம்
சேலம், நாமக்கல் மாவட்ட குடும்ப நலத்துறை சாா்பில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.


சேலம், நாமக்கல் மாவட்ட குடும்ப நலத்துறை சாா்பில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சி பெற்ற மருத்துவா்களால் கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து குடும்பநலத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிகிச்சை என்பது 5 நிமிடங்களில் செய்யப்படும். எளிமையாகவும், பாதுகாப்பான முறையிலும் சிகிச்சை வழங்கப்படும். இதன் மூலம் எந்த விதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது.
கருத்தடை செய்யும் ஆண்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,100, ஊக்க அன்பளிப்புத்தொகையாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 3,100 வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 86100- 86630 என்ற எண்ணிலும், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 94872-19896 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...