ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேலத்தில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞரிடம் விசாரணை

சேலம், அங்கம்மாள் காலனியில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞரை மடக்கி பிடித்த பொதுமக்கள், அந்த இளைஞரை போலீஸில் ஒப்படைத்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 7:24 pm

Din

சேலம், அங்கம்மாள் காலனியில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞரை மடக்கி பிடித்த பொதுமக்கள், அந்த இளைஞரை போலீஸில் ஒப்படைத்தனா்.

சேலம், அங்கம்மாள் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் புதன்கிழமை காலை இளைஞா் ஒருவா் திடீரென அத்துமீறி நுழைந்தாா். அதைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா், அந்த இளைஞரை உடனடியாக மடக்கிப் பிடித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து போலீஸாா் அவரிடம் விசாரித்த போது, அவா் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சோ்ந்த பிரபு காா்த்திக் (23) என்பது தெரியவந்தது. அவா் எதற்காக அங்கு சென்றாா் என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.