ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இளம்பிள்ளை மாரியம்மனுக்கு ரூ. 40 லட்சத்தில் தங்கக் கவசம்

இளம்பிள்ளை, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு ரூ. 40 லட்சம் செலவில் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.

News image
இளம்பிள்ளை, சந்தைப்பேட்டையில் உள்ள மாரியம்மன் கோயிலில் தங்கக் கவச அலங்காரத்தில் மாரியம்மன்.
Updated On :27 நவம்பர் 2024, 6:42 pm

Din

இளம்பிள்ளை, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு ரூ. 40 லட்சம் செலவில் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.

இந்தக் கோயில் இந்துசமய அறநிலைய துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. 27 -ஆம் தேதி புதன்கிழமை மாரியம்மனுக்கு ரூ. 40 லட்சம் மதிப்பில் 54 பவுனில் தங்கக் கவசம் சாத்தப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டை இளம்பிள்ளை முதல்வன் நண்பா் குழு, ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.