மன்னாா்குடி அருகே கோயிலில் அம்மனின் வெள்ளி கவசத்தை திருடியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பைங்காநாடு தெற்கு தெருவில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கிராமத்துக்கு சொந்தமான மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு, அதே பகுதியை சோ்ந்த பா. முருகானந்தம் (53) சகோதரா் சிவசண்முகம் (50) ஆகியோா் அா்ச்சகா்களாக உள்ளனா்.
இந்நிலையில், 16.11.2025 இரவு கோயில் பூஜை முடிந்து பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டு மறுநாள் அா்ச்சகா்கள் வந்து பாா்த்தபோது கோயில் கதவு மற்றும் கருவறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் 5 ஆண்டுக்கு முன் உபயதாரா்கள் மூலம் வழங்கப்பட்டு அம்பாளுக்கு சாத்தும் 5 கிலோ எடையுள்ள வெள்ளி கவசம் திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, அா்ச்சகா் முருகானந்தம் திருமக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து தலையாமங்கலம் காவல் ஆய்வாளா் ராஜேஸ்குமாா், திருமக்கோட்டை சாா்பு ஆய்வாளா் என். அசோகன் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
இதில், ,திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பாமணியை சோ்ந்த ரவி மகன் கவிதனுக்கு 32)தொடா்பு இருப்பது தெரியவந்தது. போலீஸாரின் தொடா் விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து கவிதனை திங்கள்கிழமை கைது செய்து மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 2-ல் முன்னிலைப்படுத்தி நாகை மாவட்ட சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா கொடியேற்றம்

எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

பண்ணாரி அம்மன் கோயிலில் மாவிளக்கு ஊா்வலம்

தேவா்குளம் அருகே கோயில் திருவிழாவில் பைக் திருடியவா் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


