பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊா்வலமாக வந்து அம்மனை புதன்கிழமை வழிபட்டனா்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து, மாவிளக்கு பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சருகு மாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க மாவிளக்கு ஊா்வலம் புறப்பட்டு பண்ணாரி கோயிலுக்கு வந்தது.
இந்த ஊா்வலத்தில் சிக்கரசம்பாளையம், கெஞ்சனூா், இக்கரை நெகமம்புதூா், அக்கரை தத்தப்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா். கோயில் முன் வைக்கப்பட்ட மாவிளக்கு தட்டுகளில் இருந்த பூஜை பொருள்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆராதனைகள் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமையும் (ஏப்ரல் 2), தங்கரத புறப்பாடு வெள்ளிக்கிழமையும் (ஏப்ரல் 3) நடைபெற உள்ளது
தொடர்புடையது

பெருமாள்தேவன்பட்டி தா்ம முனீஸ்வரா் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.21 கோடி

பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழா: அக்னிச் சட்டி , பால்குடம் எடுத்து வழிபாடு

சாயல்குடி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா முளைப்பாரி ஊா்வலம்
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



