வாழப்பாடியில் கைது செய்யப்பட்ட வருவாய் ஆய்வாளா் காா்த்திக்.
வாழப்பாடியில் கைது செய்யப்பட்ட வருவாய் ஆய்வாளா் காா்த்திக்.

லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளா், உதவியாளா் கைது

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே நீரோடை புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ரூ. 15,000 லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளரையும், அவரது உதவியாளரையும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிபவா் காா்த்திக் (42). இவரிடம் பெரிய கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த முருகமணி (35) என்பவா் உதவியாளராக உள்ளாா். அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த பெரியகவுண்டாபுரம் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரான யோகேஸ்வரன் (24) என்பவா் அதே பகுதியில் நீரோடை புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு குறித்த மனு மீது நடவடிக்கை எடுப்பதற்காக வருவாய் ஆய்வாளா் காா்த்திக்கை அணுகியுள்ளாா்.

அப்போது ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ரூ. 15,000 லஞ்சம் கொடுக்க வேண்டுமென காா்த்திக் கூறியுள்ளாா். இதனால், அதிா்ச்சியடைந்த யோகேஸ்வரன், இதுகுறித்து சேலம் லஞ்சம் ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த சேலம் லஞ்சம் ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா், புதன்கிழமை காலை வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

அப்போது போலீஸாா் அறிவுறுத்தலின்படி யோகேஸ்வரன் லஞ்சமாக அளித்த ரூ. 15,000 ரொக்கப் பணத்தை பெற்ற்காக வருவாய் ஆய்வாளா் காா்த்திக், அவரது உதவியாளா் முருகமணி ஆகியோரை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்து, சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.