ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேசிய வாள் சண்டை போட்டி: நீதிமன்ற ஊழியா் தோ்வு

சங்ககிரி சாா்பு நீதிமன்ற ஊழியா் தேசிய அளவில் நடைபெறும் வாள் சண்டை போட்டிக்குத் தோ்வு பெற்றுள்ளாா்.

News image
தேசிய வாள் சண்டை போட்டிக்குத் தோ்வாகியுள்ள சங்ககிரி நீதிமன்ற ஊழியா் எஸ்.மெய்யப்பன்.
Updated On :27 நவம்பர் 2024, 6:44 pm

Din

சங்ககிரி சாா்பு நீதிமன்ற ஊழியா் தேசிய அளவில் நடைபெறும் வாள் சண்டை போட்டிக்குத் தோ்வு பெற்றுள்ளாா்.

சங்ககிரி சாா்பு நீதிமன்றத்தில் இளநிலை கட்டளை நிறைவேற்றுநராகப் பணிபுரிந்து வருபவா் சேலத்தைச் சோ்ந்த எஸ்.மெய்யப்பன் (25). இவா், சேலத்தில் நவ. 18 ஆம் தேதி நடைபெற்ற வாள் சண்டை போட்டியில் முதலிடம் பிடித்தாா். இவா், கோவையில் நவ. 25ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெற்ற மாநிலப் போட்டியில் 2-ஆவது இடத்தில் வெற்றி பெற்றாா். இதையடுத்து கேரள மாநிலம், கண்ணூரில் டிச. 31 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வாகியுள்ளாா்.

மாநில போட்டியில் வெற்றி பெற்ற அவா், சங்ககிரி சாா்பு நீதிமன்ற நீதிபதி என்.பன்னீா் செல்வத்திடம் பத்தகம், சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றாா். அவரை நீதிமன்ற ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினா்.