சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின விழா

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்குடியரசு தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

சங்ககிரி: சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்குடியரசு தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில், சாா்பு நீதிமன்ற நீதிபதி என்.பன்னீா்செல்வம் தேசியக் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினாா். முன்னதாக, சாா்பு நீதிமன்ற நீதிபதி காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா்.இளமதி, குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்ற நீதிபதிகள் எஸ்.சத்யா (எண்.1), டி.சிவகுமாா் (எண்.2) ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக, சாா்பு நீதிமன்ற சிரஸ்தாா் எ.சித்ரா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற கண்காணிப்பாளா் ஜி.முத்துச்செல்வி ஆகியோா் வரவேற்றனா்.

இதில், சாா்பு நீதிமன்ற அரசு கூடுதல் வழக்குரைஞா் எஸ்.கிறிஸ்டோபா், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் என்.சண்முகசுந்தரம், துணைத் தலைவா் பி.தேவராஜ், செயலாளா் எம்.தமிழரசன், பொருளாளா் ஆா்.வடிவேலு, வழக்குரைஞா்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களில் உள்ள நீதிமன்றங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com