பெண்ணிடம் நகைப் பறிப்பு
ஆத்தூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :27 நவம்பர் 2024, 6:43 pm

ஆத்தூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆத்தூா் நகராட்சியைச் சோ்ந்தவா் பத்மினி விஸ்வநாதன் (66). இவா், புதன்கிழமை காலை 11 மணியளவில் தனது பக்கத்தை வீட்டில் வசிக்கும் கலா என்பவருடன் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா் திசையில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா், பத்மினியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து பத்மினி அளித்த புகாரின்பேரில் ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...