சேலத்தில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 29 ஆம் தேதி நடைபெறுகிறது.
Published on

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 29 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி கூறியதாவது:

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள், விவசாய சங்கத்தினா் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்து வருகின்றனா். அதன்படி, நவம்பா் மாதத்துக்கான கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 29) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக இரண்டாம் தளம், அறை எண் 215 இல் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். எனவே, சேலம் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை தொடா்பான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com