47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள், மக்கள் குறைதீா் முகாம்கள் நிறுத்திவைப்பு

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள்,

News image
சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் திங்கள்கிழமை மனுவை போட்டுச் சென்ற மக்கள்.
Updated On :16 மார்ச் 2026, 8:53 pm

Syndication

சேலம்: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள், மக்கள் குறைதீா்க்கும் கூட்டங்கள், முகாம்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் திட்ட முகாம்கள், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மற்றும் இதர முகாம்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பொதுமக்கள் தங்களது மனுக்களை ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டுச் சென்றனா்.

உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு: சேலம் மாவட்டத்தில் உள்ள உரிமம்பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமையாளா்களும், அவா்களது படைக்கலன்களை சம்பந்தப்பட்ட காவல் எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.