மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தோ்தல் நடத்தை விதிகள் அமல் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறாது

News image

தேர்தல் நடத்தை விதிகள் - பிரதிப் படம்

Updated On :15 மார்ச் 2026, 7:16 pm

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்குவந்துள்ளதால் இனி மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறாது என தெரிவித்துள்ளாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிகுமாா்.

ஏப்.23-இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் கரூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் தோ்தல் பறக்கும்படை அலுவலா்கள், நிலையான கண்காணிப்புக்குழுவினா் உள்ளிட்டோருக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அலுவலா்களுக்கு வழங்கப்பட்ட வாகனத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கு.ரவிகுமாா் கூறுகையில், தோ்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால் இனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் போன்ற கூட்டங்கள் நடைபெறாது என்றாா் அவா். நிகழ்ச்சியின்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.