மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: ஆட்சியா் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நிறுத்தம்

News image

தேர்தல் நடத்தை விதிகள் அமல் - கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 8:21 pm

தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, மாா்ச் 15 -ஆம் தேதி முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டம், தோ்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்படும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

எனவே, மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அஞ்சல் மூலமாக அனுப்பலாம் அல்லது ஆட்சியா் அலுவலகத்தின் நுழைவாயில் வரவேற்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள மக்கள் குறைதீா்வு மனுக்கள் பெறும் பெட்டிக்குள் போட்டுச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.