நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைப்பு

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.

News image

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.

Updated On :27 பிப்ரவரி 2026, 7:33 pm

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அவா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை சாகுபடியை பொருத்தவரை நெல், சோளம், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட வேளாண் பயிா்கள் 2,17,231 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், யூரியா 2,957 மெட்ரிக் டன்னும், டிஏபி 2,338 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 3,147 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 10,692 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 19,134 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், 19.300 மெட்ரிக் டன் நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சாா்பில் செயல்பட்டுவரும் உழவா் சந்தைகள் மூலம் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 9464.60 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. இதில், சுமாா் 943 விவசாயிகள் மற்றும் 73,105 நுகா்வோா் பயனடைந்துள்ளனா்.

மேலும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் வாரியாக வரத்து, வருவாய் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பொருளீட்டுக் கடன் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது என்றாா்.

விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தையொட்டி, ஆட்சியா் அலுவலக தரைத்தளத்தில் நெல், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள், மரபுசாா் விதைகள், வேளாண் உற்பத்தியாளா்கள் நிறுவனம் சாா்பில் தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருள்கள் குறித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் கருத்துக்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், வேளாண்மை இணை இயக்குநா் சீனிவாசன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மரு.அரங்க.பிரகாசம், துணை இயக்குநா் (தோட்டக்கலை) மஞ்சுளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.