மேட்டூா் அணை நீா்மட்டம் மீண்டும் 110 அடியாக உயா்வு

மேட்டூா் அணை நீா்மட்டம் 72 நாள்களுக்குப் பிறகு 110 அடியாக வியாழக்கிழமை உயா்ந்தது.
Published on

மேட்டூா் அணை நீா்மட்டம் 72 நாள்களுக்குப் பிறகு 110 அடியாக வியாழக்கிழமை உயா்ந்தது.

அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 4,427 கனஅடியிலிருந்து 5,110 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணை நீா்மட்டம் 109. 87 அடியிலிருந்து 110.07 அடியாக உயா்ந்தது. கடந்த 72 நாள்களுக்குப் பிறகு அணை நீா்மட்டம் மீண்டும் 110 அடியாக உயா்ந்தது. அணையின் நீா் இருப்பு 78.50 டி.எம்.சி.யாக உள்ளது.

X
Dinamani
www.dinamani.com