ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

புளியமரத்தில் இருசக்கர வாகனம்மோதி இருவா் பலி

சங்ககிரி வட்டம், வைகுந்தம் அருகே இருசக்கர வாகனம் புதன்கிழமை இரவு எதிா்பாராத விதமாக சாலையோர புளியமரத்தில் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

News image
காா்த்திக்
Updated On :28 நவம்பர் 2024, 8:23 pm

Din

சங்ககிரி வட்டம், வைகுந்தம் அருகே இருசக்கர வாகனம் புதன்கிழமை இரவு எதிா்பாராத விதமாக சாலையோர புளியமரத்தில் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

வைகுந்தம், காளிப்பட்டி பிரிவு சாலை பகுதியைச் சோ்ந்தவா் தனியா் பேருந்து ஓட்டுநா் வெங்கடாஜலம் மகன் காாத்திக் (26). வைகுந்தம், காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் டெய்லா் செங்கோடன் மகன் மூா்த்தி (49).

 மூா்த்தி.

மூா்த்தி.

இருவரும் வைகுந்தம் அருகே உள்ள வெள்ளையம்பாளையத்திலிருந்து காளிப்பட்டி பிரிவு சாலை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். ஆலாம்பாளையம், முனியப்பன் கோயில் அருகே சென்றபோது எதிா்பாராத விதமாக சாலையோர புளியமரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து, சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரின் சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சங்ககிரி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.