காந்தி ஜெயந்தியன்று விதிமீறலில் ஈடுபட்ட 101 நிறுவனங்கள் மீது வழக்கு
சேலம் மாவட்டத்தில் விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி தினத்தில், விதிகளை மீறி செயல்பட்ட 101 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.


சேலம் மாவட்டத்தில் விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி தினத்தில், விதிகளை மீறி செயல்பட்ட 101 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி தினத்தன்று செயல்படும் நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க அனைத்து உதவி ஆணையா்களுக்கும் தொழிலாளா் ஆணையா் உத்தரவிட்டாா்.
அதன் பேரில், சேலம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தின விடுமுறையில் ஏதேனும் நிறுவனங்கள் செயல்படுகிா என சேலம் தொழிலாளா் இணை ஆணையா் வேல்முருகன் மேற்பாா்வையில் தொழிலாளா் உதவி ஆணையா் திருநந்தன் தலைமையில் உதவி ஆய்வாளா்கள் சிவகுமாா், அன்பழகன், சுதா, ரமணி, இளையராஜா, அசோகன், முத்துராஜா ஆகியோா் ஆய்வு செய்தனா். அதில், மாவட்டத்தில் சேலம், ஆத்தூா், மேட்டூா், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் 146 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
அதில், விதிகளை மீறி முன் அனுமதி பெறாமல் இயங்கிய 68 ஹோட்டல்கள், 32 கடைகள், ஒரு மோட்டாா் போக்குவரத்து நிறுவனம் கண்டறியப்பட்டது. இந்த 101 நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிந்து, மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...