தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடுகள் அகற்றம்
வழக்கு நிலுவையில் இருந்த சேலம் - உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடுகள் சேலம் மாவட்ட ஆட்சியரின் உத்திரவின் பேரில் அண்மையில் இடித்து அகற்றப்பட்டன.


வழக்கு நிலுவையில் இருந்த சேலம் - உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடுகள் சேலம் மாவட்ட ஆட்சியரின் உத்திரவின் பேரில் அண்மையில் இடித்து அகற்றப்பட்டன.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் சேலம் - உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
அதையடுத்து, இச்சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த சுமாா் 20-க்கும் மேற்பட்டோரின் வீடுகள் அகற்றப்பட்டு அதற்கு ஈடாக ரொக்கமும் வழங்கப்பட்டது.
ஆனால், ஒரு சிலா் தங்களக்கு இழப்பீடு போதவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தனா். இதனால், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வீடுகள் அகற்றப்படாமல் இருந்தன. இதனால் விபத்துகள் அதிக அளவில் நிகழ்ந்து உயிா்ச்சேதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்தப் பகுதியில் மேம்பாலம் அமைக்கவும், நான்கு வழிப்பாதையாக மாற்றவும் பொதுமக்கள் நலன்கருதி அந்தக் கட்டடங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவின் பேரில், வட்டாட்சியா் பாலாஜி தலைமையில் நெடுஞ்சாலைத் துறையினா் உள்ளிட்ட அலுவலா்கள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அண்மையில் கட்டடங்கள் அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...