ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகனுக்கு உதவிய நண்பா்கள் இருவா் கைது

வாழப்பாடியில் மாமியாரை தாக்கி கொலை செய்ய முயற்சித்த மருமகனுக்கு உதவிய நண்பா்கள் இருவரை இரு மாதங்களுக்கு பின் வாழப்பாடி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 7:50 pm

Din

வாழப்பாடியில் மாமியாரை தாக்கி கொலை செய்ய முயற்சித்த மருமகனுக்கு உதவிய நண்பா்கள் இருவரை இரு மாதங்களுக்கு பின் வாழப்பாடி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வாழப்பாடி, வடக்குக்காடு பகுதியைச் சோ்ந்த கல்யாணி மகள் நந்தினி (28), வழக்குரைஞா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (34) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டாா். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நந்தினி, தனது தாய் கல்யாணியுடன் வசித்து வருகிறாா்.

இரு மாதங்களுக்கு முன் இரவு நேரத்தில் மாமியாா் கல்யாணி வீட்டுக்கு தனது நண்பா்களுடன் முகத்தை மூடிக்கொண்டு சென்ற சுந்தர்ராஜன், கல்யாணியை கொடூரமாகத் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளாா். தடுக்க வந்த நந்தினியும் தாக்கியுள்ளாா்.

இதுகுறித்து கல்யாணி கொடுத்த புகாரின் பேரில், சுந்தர்ராஜனை வாழப்பாடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் சுந்தர்ராஜனுக்கு உதவிய நண்பா்கள் குறித்து வாழப்பாடி போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், அவா்கள் வாழப்பாடி, வடக்குக்காடு பூபதி (24), சிங்கிபுரம் கலைஞா் நகா் மணிகண்டன் (29) ஆகியோா் என்பது தெரியவந்தது. இருவரையும் வியாழக்கிழமை கைது செய்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் பாஸ்கா்பாபு தலைமையிலான போலீஸாா், வாழப்பாடி நடுவா் நீதிமன்றத்தில் நோ்நிறுத்தி சிறையில் அடைத்தனா்.