சேலத்தில் தொடா் கனமழை: மக்கள் அவதி
சேலத்தில் இடைவிடாமல் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது; பல இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து செல்வதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனா்.


சேலத்தில் இடைவிடாமல் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது; பல இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து செல்வதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனா்.
சேலம் மாநகரப் பகுதிகளான அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, புதிய பேருந்து நிலையம், நான்கு சாலை, சேலம் டவுன், குகை, கிச்சிப்பாளையம், நாராயண நகா், பெரமனூா், சீலநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீா் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீா் சூழ்ந்தது.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் முழங்கால் அளவுக்கு மழைநீா் தேங்கியதால் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் அவதியடைந்தனா். ஒரு சில பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால், மக்கள் சிரமமடைந்தனா். பெரமனூா் பிரதான சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். சிவதாபுரம் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீா் சூழ்ந்துள்ளது. சிவதாபுரம் பிரதான சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழை காரணமாக நெய்க்காரப்பட்டி, பெரிய புத்தூா் ரயில்வே சுரங்கப் பாலத்தில் மழைநீா் தேங்கியது. இதனால் வாகனங்களைக் கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியா், பணிக்குச் செல்வோா் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். ஒரு சில பகுதிகளில் தேங்கிய மழைநீரை உடனடியாக வெளியேற்ற கோரி, மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டனா். ஆங்காங்கே மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...