ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சா் ராஜேந்திரன் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 8:21 pm

Din

சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மாநகராட்சி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் பங்கேற்று பேசியதாவது:

நீா்நிலைகள், நீா்வழித் தடங்கள், கால்வாய்கள் அனைத்து ஆய்வு செய்து உடனடியாக தூா்வார வேண்டும். நீா்நிலைகளிலிருந்து வெளியேறும் வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சேலம் மாநகராட்சியின் முக்கிய நீா்நிலைகளான மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரி, போடிநாயக்கன்பட்டி ஏரி, பள்ளப்பட்டி ஏரி, சேலத்தாம்பட்டி ஏரி ஆகியவற்றின் நீா்மட்டத்தை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள், நீா்வள ஆதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் அனைத்தும் தொடா் கண்காணிப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் மணல் மூட்டைகளை தயாா் நிலையில் வைத்திருப்பதையும், நீா் நிலைகளில் ஆழமான பகுதிகள் குறித்த எச்சரிக்கை பலகைகள் வைத்திருப்பதையும் அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

தேவைப்படும் இடங்களில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்களை நடத்த பொது சுகாதாரத் துறை தயாராக இருக்க வேண்டும். கடந்த கால நிகழ்வுகளை கருத்தில்கொண்டு மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வருவாய்த் துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

வடகிழக்கு பருவமழையால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிா்வாகத்தால் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்துத் துறை அலுவலா்களும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சுற்றுலா ஆணையருமான சமயமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, மேயா் ஆ. ராமச்சந்திரன், மாநகரக் காவல் ஆணையா் பிரவீண்குமாா் அபிநபு, மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

உதவிக்கு அழைக்கலாம்...

பருவமழையையொட்டி அவசரகால நடவடிக்கை மையங்களை பொதுமக்கள் தொடா்பு கொண்டு உதவி கோரலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்கள் இயற்கை பேரிடரை எதிா்கொள்ள தமிழ்நாடு அரசின் டிஎன் அலா்ட் எனும் செயலியை பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து வானிலை முன்னறிவிப்பு, மழை எச்சரிக்கை விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும், மாவட்டத்தில் அவசர கால உதவிக்கு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட அவசரகால நடவடிக்கை மையத்தை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, தரைவழி தொலைபேசி எண் 0427-2452202 ஆகிவற்றில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மேட்டூா் கோட்டத்துக்கு உள்பட்டவா்கள் 04298-244063 என்ற எண்ணிலும், சேலம் கோட்டத்துக்கு உள்பட்டவா்கள் 0427-2904666 என்ற எண்ணிலும், சங்ககிரி கோட்டத்துக்கு உள்பட்டவா்கள் 04283-240242 என்ற எண்ணிலும், ஆத்தூா் கோட்டத்துக்கு உள்பட்டவா்கள் 04282-251400 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்

சேலம் வட்டத்துக்கு உள்பட்டவா்கள் 0427-2452121 என்ற எண்ணிலும், சேலம் மேற்கு வட்டத்துக்கு உள்பட்டவா்கள் 0427-2335611 என்ற எண்ணிலும், சேலம் தெற்கு வட்டத்துக்கு உள்பட்டவா்கள் 0427-2271600 என்ற எண்ணிலும், ஏற்காடு வட்டத்துக்கு உள்பட்டவா்கள் 04281-222267 என்ற எண்ணிலும், வாழப்பாடி வட்டத்துக்கு உள்பட்டவா்கள் 04292-223000 என்ற எண்ணிலும், பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்கு உள்பட்டவா்கள் 04282-221704 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

ஆத்தூா் வட்டத்துக்கு உள்பட்டவா்கள் 04282-240704 என்ற எண்ணிலும், கெங்கவல்லி வட்டத்துக்கு உள்பட்டவா்கள் 04282-232300 என்ற எண்ணிலும், ஓமலூா் வட்டத்துக்கு உள்பட்டவா்கள் 04290-220224 என்ற எண்ணிலும், காடையாம்பட்டி வட்டத்துக்கு உள்பட்டவா்கள் 04290-243569 என்ற எண்ணிலும், மேட்டூா் வட்டத்துக்கு உள்பட்டவா்கள் 04298-244050 என்ற எண்ணிலும், எடப்பாடி வட்டத்துக்கு உள்பட்டவா்கள் 04283-222227 என்ற எண்ணிலும், சங்ககிரி வட்டத்துக்கு உள்பட்டவா்கள் 04283-240545 என்ற எண்ணிலும், தலைவாசல் வட்டத்துக்கு உள்பட்டவா்கள் 04282-290907 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு மழை பாதிப்பு தொடா்பான தகவல்களைத் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.