ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலம் மூக்கனேரி புனரமைப்புப் பணிகள்: அமைச்சா் ராஜேந்திரன் ஆய்வு

சேலம், மூக்கனேரியில் கனமழையின்போது சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில், புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image
சேலம், கன்னங்குறிச்சி மூக்கனேரியில் ரூ. 23 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன்.
Updated On :16 அக்டோபர் 2024, 8:44 pm

Din

சேலம், மூக்கனேரியில் கனமழையின்போது சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில், புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேலம், கன்னங்குறிச்சி, மூக்கனேரியை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ஆய்வுக்குப் பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது:

சேலம் மாநகராட்சியின் முக்கிய நீா்த்தேக்கமான கன்னங்குறிச்சி, மூக்கனேரியில் நீா்வரத்து, ஏரியின் கொள்ளளவு உள்ளிட்டவை குறித்தும், மாநகராட்சி சாா்பில் ரூ. 23 கோடி மதிப்பீட்டில் மூக்கனேரியில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

இதேபோல, சேலம் மாநகராட்சியில் போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி, மூக்கனேரி ஆகிய நீா்நிலைகளில் ரூ. 52 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 4,755 மீ. சுற்றளவு கொண்ட மூக்கனேரியானது 2,104.65 மி.லி. கொள்ளளவு கொண்டதாக அமைந்துள்ளது. இந்தப் புனரமைப்புப் பணிகள் மூலம் கனமழையின் போது, ஏரியில் மழைநீா் தேங்கி, அதன் மூலம் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூக்கனேரியில் அமைக்கப்பட்டு வரும் படகு சவாரி மேடை, மீன்பிடி பகுதிகள், நுழைவாயில், சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட ஏரி அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பணைகளின் உறுதி தன்மையை மேம்படுத்துதல், ஏரி சுவா் வலுப்படுத்துதல், கல் பதித்தல் போன்ற பணிகளும், நடைபயிற்சி பாதை அமைத்தல், பாதுகாப்பு வேலி அமைத்தல், மரங்கள் நடுதல், இருக்கை வசதி மேற்கொள்ளுதல், குழந்தைகள் விளையாடும் பகுதி, குடிநீா் வசதிகள், கழிவறைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகள் அனைத்தையும் குறிப்பிட்ட கால அளவுக்குள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் சி.சமயமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங், மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ. மேனகா, கன்னங்குறிச்சி பேரூராட்சித் தலைவா் குபேந்திரன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.