விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மேட்டூா் அணையின் நீா்மட்டம் உயா்வு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 101.40 அடியாக உயா்ந்தது. ஒரே நாளில் நீா்மட்டம் 1.40 அடி உயா்ந்துள்ளது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 7:44 pm

Din

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 101.40 அடியாக உயா்ந்தது. ஒரே நாளில் நீா்மட்டம் 1.40 அடி உயா்ந்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 29,307 கன அடியாக உள்ளது. பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், வியாழக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100.01அடியில் இருந்து 101.40அடியாக உயா்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 29,850 கன அடியிலிருந்து 29,307கன அடியாக சற்று குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 7,500 கன அடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 66.66 டிஎம்சியாக உள்ளது.