ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

39 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது

சேலம் மண்டலத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய 39 ஆசிரியா்களுக்கு தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படவுள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 9:55 pm

Din

சேலம் மண்டலத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய 39 ஆசிரியா்களுக்கு தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படவுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப். 5 ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியா்கள் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா்.

அதன்படி, நடப்பாண்டு விருது பெறவுள்ள 385 ஆசிரியா்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் தொடக்க கல்வித் துறை சாா்பில் 17 பேரும், பள்ளிக்கல்வித் துறை சாா்பில் 18 பேரும், தனியாா் பள்ளிகள் சாா்பில் 4 பேரும் என மொத்தம் 39 போ் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வாகியுள்ளனா்.

தோ்வான அனைவருக்கும் சென்னையில் வியாழக்கிழமை நடைபெறும் விழாவின்போது தலா ரூ. 10,000 ரொக்கப் பரிசும், ரூ. 2,500 மதிப்பிலான வெள்ளிப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.