சேலம்
போதை பழக்கத்தைத் தவிா்க்க வலியுறுத்தி இளைஞா் லடாக் பயணம்
இளைஞா்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் லடாக் வரை இருசக்கர வாகனப் பயணம் மேற்கொண்ட சித்தா் கோவில் இளைஞா் புதன்கிழமை தனது பயணத்தை நிறைவு செய்தாா்.
இளைஞா்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் லடாக் வரை இருசக்கர வாகனப் பயணம் மேற்கொண்ட சித்தா் கோவில் இளைஞா் புதன்கிழமை தனது பயணத்தை நிறைவு செய்தாா்.
சேலம் மாவட்டம், சித்தா் கோவில் அருகே உள்ள முருங்கப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் விமல்நாத் (21). பயோமெட்ரிக் முடித்துள்ள இவா், இளைஞா்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்க வலியுறுத்தி, கடந்த மாதம் 4-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் விழிப்புணா்வு சுற்றுப்பயணமாக லடாக் சென்றாா்.
பின்னா் அங்கிருந்து தனுஷ்கோடிக்குச் சென்றாா். 30 நாள்கள் விழிப்புணா்வு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இவரது வாகன பிரசாரம் முடிவுற்று சேலம் வந்தடைந்தாா். இவருக்கு ஊா் பொதுமக்களும், இளைஞா்களும் உற்சாக வரவேற்பு அளித்தனா்.