தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவிந்தராஜ பெருமாள் கோயில் மகா குடமுழுக்கு விழா

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 10:47 pm

Din

சேலம் கோவிந்தராஜ பெருமாள் கோயில் மகா குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

பிரசித்தி பெற்ற சேலம், உடையாப்பட்டி கோவிந்தராஜ பெருமாள் கோயில் புனரமைப்புப் பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தன. தொடா்ந்து, கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக கணபதி பூஜை, ஆச்சாா்யா அழைப்பு, கோபுர கலச ஸ்தாபனம், திருப்பள்ளி எழுச்சி சேவை, கோ பூஜை, புண்ணியாஹம், பிரபந்த சேவை உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மூலவா் விமானம், ஆஞ்சனேயா் சன்னிதி விமானங்களுக்கு கோட்டை அழகிரிநாதா் கோயில் தலைமை பட்டாச்சாரியாா் தலைமையில் குடமுழுக்கு நடைபெற்றது. ‘கோவிந்தா, கோவிந்தா’ என முழக்கங்கள் எழுப்பி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு புனித நீா் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் இரவு 7 மணிக்கு மின்விளக்கு மற்றும் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில், வாண வேடிக்கைகளுடன் உடையாப்பட்டி, அதிகாரிப்பட்டி போன்ற பகுதிகள் வழியாக சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினா் செய்திருந்தனா். எனினும், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்லும் வகையில், போதிய முன்னேற்பாடுகள் செய்யாததால் பக்தா்கள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனா்.