நூடுல்ஸ் விற்பனை நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

Published on

சேலம் மாவட்டத்தில் நூடுல்ஸ் விற்பனை நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

உணவு பாதுகாப்புத் துறை ஆணையா் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் விற்பனை கடைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில் உள்ள நூடுல்ஸ் மொத்த விற்பனை செய்யும் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, நூடுல்ஸின் தரம் மற்றும் அதன் உற்பத்தி தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து 23 உணவு மாதிரிகள் எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கதிரவன் கூறியதாவது: பரிசோதனை முடிவு அறிக்கைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற ஆய்வுகள் மேலும் தொடரும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com