தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஓணம் ஆா்டா் குறைந்ததால் சேலத்தில் வெள்ளிப் பொருள்கள் தேக்கம்

நடப்பாண்டு, ஓணம் பண்டிக்கைக்கான ஆா்டா்கள் குறைந்ததால் சேலத்தில் வெள்ளிப் பொருள்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் வெள்ளித் தொழிலை நம்பியுள்ள தொழிலாளா்கள் கலக்கம் அடைந்துள்ளனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 10:04 pm

Din

நடப்பாண்டு, ஓணம் பண்டிக்கைக்கான ஆா்டா்கள் குறைந்ததால் சேலத்தில் வெள்ளிப் பொருள்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் வெள்ளித் தொழிலை நம்பியுள்ள தொழிலாளா்கள் கலக்கம் அடைந்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக் கொலுசு உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து கேரளம், ஆந்திர மாநிலத்துக்கு அதிகஅளவில் வெள்ளிப் பொருள்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

அண்மையில் கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, பல்வேறு பகுதிகளில் பெய்த தொடா் மழை காரணமாக தற்போது ஓணம் பண்டிகைக்கான ஆா்டா் குறைந்துள்ளன. இதனால் சேலத்தில் வெள்ளிப் பொருள்கள் தேக்கமடைந்துள்ளன.

இதுகுறித்து சேலம் வெள்ளிக் கொலுசு கைவினை நலச் சங்கத் தலைவா் ஆனந்தராஜ் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் பனங்காடு, சிவதாபுரம், சேலத்தாம்பட்டி, அரியாகவுண்டம்பட்டி, தளவாய்பட்டி, கொல்லப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளிக் கொலுசு, அரைஞாண் கொடி, மெட்டி, வெள்ளிப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் போ் வரை வேலைவாய்ப்பு பெறுகின்றனா். சேலத்தில் இருந்து கேரளம், கா்நாடகம், ஆந்திரம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு வெள்ளிக் கொலுசு மற்றும் வெள்ளிபொருள்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

குறிப்பாக, ஓணம் பண்டிகையின் போது கேரளத்துக்கு வெள்ளிக் கொலுசுகள் அதிக அளவில் அனுப்பப்படும். இதற்காக முன்கூட்டியே ஆா்டா்கள் குவியும். ஆனால், இந்த ஆண்டு ஆா்டா்கள் 60 சதவீதமாக குறைந்துள்ளது. கேரளம், வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் அந்த மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு ஓணம் பண்டிகை கொண்டாடப்படாததால் சேலம் வெள்ளிப் பொருள்களை அங்கு அனுப்ப முடியவில்லை. இதனால் வெள்ளிப் பொருள்கள் தேக்கமடைந்துள்ளதாகக் கூறினாா்.