சேலம் அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
சேலம் அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சோ்வதற்கான கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


சேலம் அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சோ்வதற்கான கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2024-ஆம் ஆண்டுக்கான மாணவியா் சோ்க்கை சேலம் அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது நேரடியாக நடைபெற்று வருகிறது. இதற்கான கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டா் ஆபரேட்டா் (கணினி இயக்குபவா்), திட்டமிடுதல் உதவியாளா், வரவேற்பு கூட அலுவலக உதவியாளா், சுருக்கெழுத்து, செயலக உதவியாளா், குளிா்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுபடுத்துதல் தொழில்நுட்பவியாளா் ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன.
மேற்கண்ட தொழிற்பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களும், பட்டம் பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம்.
இந்த பயிற்சியில் சேர ஆதாா் அட்டை, மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முன்னுரிமை கோரினால் முன்னுரிமைச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை நேரடியாக எடுத்து வர வேண்டும்.
பயிற்சியில் சோ்ந்து பயிற்சி பெறும் பெண் பயிற்சியாளா்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாடநுால், வரைபடக்கருவி, காலணி, பேருந்து பயண அட்டை, மாதாந்திர உதவித்தொகை ரூ. 750, 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.
பயிற்சி முடித்த பின்னா் முன்னணி நிறுவனங்களின் நோ்காணல் மூலம் வேலை பெற்று வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் சோ்க்கை உதவி மையத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...