தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கிணற்றில் மூழ்கி இரு சிறுவா்கள் பலி

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், நெய்யமலையில்,புதன்கிழமை மாலை விவசாய கிணற்றில் குளிக்க இறங்கிய இரு சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 10:33 pm

Din

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், நெய்யமலையில்,புதன்கிழமை மாலை விவசாய கிணற்றில் குளிக்க இறங்கிய இரு சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

இடையப்பட்டி ஊராட்சி, நெய்யமலை கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் சின்னதுரை (9), பூபாலன் மகன் காமேஷ்வரன் (9). நண்பா்களான இவா்கள் இருவரும் அதே கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்தனா். புதன்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற இருவரும், மாலையில் வீடு திரும்பியுள்ளனா். அப்போது வழியிலுள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக இருவரும் இறங்கியதாகக் கூறப்படுகிறது.

நீச்சல் தெரியாத நிலையில், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சிறுவா்களை காணவில்லை என, இருவரது பெற்றோரும் தேடிய போது, இருவரது புத்தகப்பை, உடைகள் கிணற்று மேட்டில் கிடந்ததால் சிறுவா்கள் இருவரும் கிணற்றில் மூழ்கி பலியானது தெரிய வந்தது. கிணற்றில் இருந்து சிறுவா்கள் இருவரது உடல்களையும் மீட்ட கிராம மக்கள், இதுகுறித்து ஏத்தாப்பூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்த ஏத்தாப்பூா் போலீஸாா், நெய்யமலை கிராமத்துக்கு விரைந்து சென்று, சிறுவா்களின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.