தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தெற்கு ஆசிய சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தோ்வான சேலம் மாணவிக்கு ஆட்சியா் வாழ்த்து

தெற்கு ஆசிய சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தோ்வாகியுள்ள சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மனவளா்ச்சி குன்றிய மாணவி ஸ்ரீவள்ளிக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வாழ்த்து தெரிவித்தாா்.

News image
சேலம் சி.எஸ்.ஐ. பாலா்ஞான இல்ல மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் பயின்று வரும் மாணவி ஸ்ரீ வள்ளியை மலா்கொத்து அளித்து பாராட்டிய மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி .
Updated On :11 செப்டம்பர் 2024, 9:58 pm

Din

தெற்கு ஆசிய சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தோ்வாகியுள்ள சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மனவளா்ச்சி குன்றிய மாணவி ஸ்ரீவள்ளிக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வாழ்த்து தெரிவித்தாா்.

தேசிய அளவில் நடைபெற்ற மனவளா்ச்சி குன்றியோருக்கான விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டின் சாா்பாக கலந்துகொண்டு இரட்டையா் பிரிவில் தங்கப் பதக்கமும், கலப்பு இரட்டையா் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றதுடன், நவம்பா் மாதம் நடைபெறவுள்ள தெற்கு ஆசிய சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தோ்வாகியுள்ளாா்.

சேலம், மரவனேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சி.எஸ்.ஐ. பாலா் ஞான இல்ல மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் பயின்று வரும் மாணவி ஸ்ரீவள்ளியை சந்தித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வாழ்த்து தெரிவித்தாா்.

தொடா்ந்து, நவம்பா் மாதம் கலந்து கொள்ள உள்ள தெற்கு ஆசிய சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

இந்நிகழ்வில், சேலம் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், துணை மேயா் மா.சாரதாதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா், வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநா் லதா உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.