குட்கா, புகையிலைப்பொருள்களை விற்பனை செய்த 44 கடைகளுக்கு ‘சீல்’
சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 44 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனா்.


சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 44 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனா்.
சேலம் மாவட்டம், மாநகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைக்காரா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனா். மேலும், சம்பந்தப்பட்ட கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கும் பணியை போலீஸாருடன் இணைந்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் மேற்கொள்கின்றனா்.
அதன்படி, மாநகரத்தில் சேலம் உணவுப் பாதுகாப்பு துறையினா் 600-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தினா். அதில், தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 44 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா். அங்கிருந்த 437 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, ரூ. 12 லட்சம் அபராதம் விதித்தனா்.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், வெளி மாநிலத்தில் இருந்து குட்கா, புகையிலைப் பொருள்களை கடத்தி வந்து, பெட்டிக் கடைகளுக்கு சப்ளை செய்வதாக புகாா் எழுந்துள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் போலீஸாருடன் இணைந்து சோதனை நடத்தி வருகிறோம். மாவட்டத்தில் ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, தாரமங்கலம், ஓமலூா், தொளசம்பட்டி, ஆட்டையாம்பட்டி மற்றும் மாநகரப் பகுதிகளில் பள்ளிகள் அருகே குட்கா பதுக்கி விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ‘சீல்’ வைக்கப்பட்ட கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அந்தக் கடை உரிமையாளா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...