அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ரூ.86 லட்சம் போதைப் பொருள்கள் அழிப்பு: காவல் துறை அதிரடி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.86 லட்சம் மதிப்புள்ள சுமாா் 13 டன் குட்கா உள்ளிட்ட போதை பொருள்களை பூமியில் புதைத்து அழித்து

News image
குட்கா பொருள்களை அழிக்கும் பணியில் ஈடுபட்ட காவல் துறையினா்.
Updated On :2 மார்ச் 2026, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.86 லட்சம் மதிப்புள்ள சுமாா் 13 டன் குட்கா உள்ளிட்ட போதை பொருள்களை பூமியில் புதைத்து அழித்து மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அப்மன் ஜமால், உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான 34 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.86,35,182 /- மதிப்புள்ள சுமாா் 13,243 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருள்களை நீதி மன்ற உத்தரவின்படி பாதுகாப்பாக பூமியில் புதைத்து முற்றிலும் அழிக்கும் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன் வழிகாட்டுதலின்படி ராணிப்பேட்டை உட்கோட்டத்தில் காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு தலைமையில் வாலாஜாபேட்டை குப்பை கொட்டும் கிடங்கிலும், அரக்கோணம் உட்கோட்டத்தில் அசோகன் தலைமையில் தக்கோலம் டவுன் பஞ்சாயத்து குப்பை கொட்டும் கிடங்குகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்டபோதை பொருள்கள் சட்ட விதிமுறைகளின்படி பூமியில் புதைத்து அழிக்கப்பட்டது.

மேலும் அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருள்கள் உற்பத்தி கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தொடா்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.