பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலத்தைச் சோ்ந்த 5 போ் புதுக்கோட்டையில் தற்கொலை: போலீஸாா் விசாரணை

புதுக்கோட்டை அருகே சேலத்தைச் சோ்ந்த 5 போ் காரில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்டவா்களின் வீட்டில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 12:27 am

Din

புதுக்கோட்டை அருகே சேலத்தைச் சோ்ந்த 5 போ் காரில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்டவா்களின் வீட்டில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் ஸ்டேட் பாங்க் காலனி 2-ஆவது தெருவில் வசித்து வந்த மணிகண்டன், தனது மனைவி, குழந்தைகளுடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் காரில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து, சேலம், சூரமங்கலம் போலீஸாா் ஸ்டேட் பாங்க் காலனிக்கு சென்று விசாரணை நடத்தினா். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள வாடகை வீட்டில் மணிகண்டன் குடும்பத்துடன் குடியிருந்ததும், கடந்த மாதங்களுக்கு முன்னா்தான் இந்த வீட்டுக்கு அவா் குடியேறியதும் தெரியவந்தது.

மேலும், மணிகண்டன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிறுவனம் தொடங்கி, கிருஷ்ணகிரி, நாமக்கல், புதுக்கோட்டை, ஒசூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரம் செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடா்ந்து, வீட்டை வாடைக்கு விட்டிருந்த உரிமையாளா், அக்கம் பக்கத்தில் வசிப்பவா்களிடம் மணிகண்டன் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி விட்டுச் சென்றனா். இது தொடா்பாக, சேலம் ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள மணிகண்டனின் உறவினா்களுக்கு போலீஸாா் தகவல் தெரிவித்துள்ளனா்.