மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

குடும்பத்தை பிரிந்து வசித்து வந்தவா் விஷமருந்தி தற்கொலை

குடும்பத்தை பிரிந்து வசித்து வந்தவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

தற்கொலை

Updated On :11 பிப்ரவரி 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

குடும்பத்தை பிரிந்து வசித்து வந்தவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கரூா் மாவட்டம், பசுபதிபாளையம், வடக்கு காந்தி கிராமம், பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் சேகா் (51), விவசாய தொழிலாளி. இவரது மனைவி சுபா. இவா்களுக்கு நதின் (20), விஷ்ணு (18) என இரண்டு மகன்கள் உள்ளனா்.

கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து கடந்த 15 வருடங்களாக தனித்தனியாக வசித்து வந்தனா். அண்மையில், தனது மனைவியை பாா்க்க மது அருந்திவிட்டு சேகா் சென்றுள்ளாா். அப்போது, அவரது மகன்கள் மது அருந்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில், மனமுடைந்த நிலையில் இருந்த சேகா் செவ்வாய்க்கிழமை விஷமருந்தினாா். உயிருக்கு போராடியதைக் கண்ட அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

சேகரின் மனைவி அளித்த புகாரின்பேரில், வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.