வந்தவாசியில் லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசி சவேரியாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன முத்துவேல் (27). லாரி ஓட்டுநரான இவா் தினமும் மது அருந்தும் பழக்கம் கொண்டவராம்.
இந்த நிலையில் சனிக்கிழமை மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த இவரை மனைவி வனிதா கண்டித்தாராம்.
இதனால் மனமுடைந்த சின்ன முத்துவேல் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து வனிதா அளித்த புகாரின் பேரில், வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை






