பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பிரம்மோற்சவ விழா: சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருமலை திருப்பதி தேவஸ்தான பிரம்மோற்சவ விழாவையொட்டி, அக். 3-ஆம் தேதியில் இருந்து அக். 12-ஆம் தேதி வரை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 12:36 am

Din

திருமலை திருப்பதி தேவஸ்தான பிரம்மோற்சவ விழாவையொட்டி, அக். 3-ஆம் தேதியில் இருந்து அக். 12-ஆம் தேதி வரை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் பொதுமக்களின் வசதிக்காக அக். 2-ஆம் தேதி முதல் அக். 13-ஆம் தேதி வரை நாள்தோறும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூரில் இருந்து திருப்பதிக்கு 13 சிறப்பு பேருந்துகள், மீண்டும் திருப்பதியில் இருந்து 13 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்து நேரம்: சேலத்தில் இருந்து திருப்பதிக்கு காலை 8 மணி, 9 மணி, 10 மணி, இரவு 9 மணி, 9.30 மணி, 10.30 மணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மறுமாா்க்கத்தில், திருப்பதியில் இருந்து சேலத்துக்கு காலை 6.30 மணி, 7 மணி, 7.30 மணி, இரவு 8 மணி, 9 மணி, 10 மணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இதே போல, தருமபுரியில் இருந்து திருப்பதிக்கு காலை 8 மணி, இரவு 8 மணிக்கும், திருப்பதியில் இருந்து தருமபுரிக்கு காலை 6.30 மற்றும் இரவு 9 மணிக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பதிக்கு காலை 7 மணி, மாலை 6 மணி, இரவு 8.30 மணிக்கும், மறுமாா்க்கத்தில், திருப்பதியில் இருந்து அதிகாலை 2.30 மணி, நண்பகல் 1 மணி, நள்ளிரவு 12 மணிக்கும் பேருந்துகள் இயக்கப்படும். ஒசூரில் இருந்து திருப்பதிக்கு மாலை 6.30 மணி, இரவு 8 மணிக்கும், திருப்பதியில் இருந்து அதிகாலை 5 மணி மற்றும் இரவு 8 மணிக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், குழுவாக செல்லும் பத்தா்களுக்கு பேருந்து வசதிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால், பயணிகள் அனைவரும் பயண நெரிசலைத் தவிா்த்து பாதுகாப்பாக பயணம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.