பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
சேலம், கோட்டை மைதானத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.
Updated On :27 செப்டம்பர் 2024, 12:34 am

Din

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம், கோட்டை மைதானத்தில் அரசு ஊழியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, செயலாளா் சுரேஷ், பொருளாளா் செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாடு முழுவதும் அனைத்து துறைகளிலும் எண்ணற்ற காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், எல்ஐசி, வங்கி சேவை, ராணுவம், இயற்கை வளம் உள்ளிட்ட அரசு மற்றும் பொதுத் துறைகளை தனியாா் மயமாக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், தினக்கூலி மதிப்பூதியம் தொகுப்பு ஊதியம் உள்ளிட்ட நியமன முறையை ரத்து செய்து பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியா்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை நிலுவையின்றி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், அரசு ஊழியா் சங்க மாவட்ட நிா்வாகிகள் ராணி, அமராவதி, சிங்கராயன், திருநாவுக்கரசு, கிரிராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.