ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்னூரில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு
சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் எஸ்.ரங்கராஜன் தலைமைவகித்தாா்.
பொறியாளா் கழக மாநில செயலா் விக்கிரமன், எம்ப்ளாயீஸ் ஃபெடரேசன் சிவசெல்வம், இன்ஜினியா் சங்கத்தின் சங்கா், சிஐடியு நடராஜன மற்றும் ஐக்கிய சங்கம், டிஎன்பிஇஓ சங்கம், அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிா்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
பொறியாளா்கள், அலுவலா்களுக்கு 2023-ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வை வழங்க வேண்டும். மின்வாரியத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள், பொறியாளா், அலுவலா்களை பிரித்தாளும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், மின்வாரிய தொழிற்சங்கத்தினா் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோயில் நில பட்டாவில் குளறுபடி: பத்து ரூபாய் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் சாலை மறியல்

மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


