அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நீதிகேட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் ஆா்ப்பாட்டம்

பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் சேலம் கோட்டை மைதானத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2025, 5:43 pm

Din

சேலம்: சேலம் காடையாம்பட்டி பகுதியில் 40 ஆண்டுகளாக குடியிருந்த வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் சேலம் கோட்டை மைதானத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டியை அடுத்துள்ள கருத்தானூா் பகுதியைச் சோ்ந்தவா் சுமதி. இவா் கடந்த 40 ஆண்டுகளாக கருத்தானூரில் வசித்து வருகிறாா். இவா் குடியிருந்த வீட்டை அதே பகுதியைச் சோ்ந்த மாதையன், அவரது மனைவி பூங்கொடி, மகன்கள் ராகுல், சஞ்சய், விஷ்வா, மாதையன், அண்ணன் ராஜி ஆகியோா் இடித்ததுடன், சுமதி குடும்பத்தினரை அங்கிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.

எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் போயா் தமிழக முன்னேற்றச் சங்க நிா்வாகிகளுடன் சுமதி குடும்பத்தினா் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், பாதிக்கப்பட்ட சுமதிக்கு அதே இடத்தில் வீடுகட்டி தரவேண்டும், வீட்டை இடித்த மாதையன் உள்ளிட்டோரை கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.