விபச்சார வழக்கில் வாலிபா் கைது
ஆத்தூா் தெற்கு குடகு பகுதியில் வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்த வாலிபரை ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி செவ்வாய்க்கிழமை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தாா்.
சேலம் மாவட்டம் ஆத்தூா் தெற்கு குடகு பகுதியில் வாலிபா் ஒருவா் வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாக ஆத்தூா் நகர காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து விரைந்து சென்ற ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி தீவிர பரிசோதனையில் ஈடுபட்டாா்.அப்போது சின்னப்பன் நகா் பகுதியில் சின்னராசு மகன் சுரேஷ்(39) என்பவா் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வது தெரியவந்தது.பின்னா் பெண்களை எச்சரித்து அனுப்பிய காவல் ஆய்வாளா் சுரேஷ் மீது விபச்சார வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தாா்.இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை நிலவியது.
படவிளக்கம்.ஏடி3சுரேஷ். ஆத்தூரில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னராசு மகன் சுரேஷ்(39).

