உரியவரிடம் பொருள்களை ஒப்படைக்கும் நகர காவல் ஆய்வாளா் சந்தானமேரி.
உரியவரிடம் பொருள்களை ஒப்படைக்கும் நகர காவல் ஆய்வாளா் சந்தானமேரி.

வீதியில் தவறவிட்ட பொருள்கள் உரியவரிடம் ஒப்படைப்பு!

திருவாரூா் கடைவீதியில், தவறவிட்ட பொருள்கள் உரியவரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
Published on

திருவாரூா் கடைவீதியில், தவறவிட்ட பொருள்கள் உரியவரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

திருவாரூா் நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கடைத் தெருவில் விஜயபுரம் பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி என்பவரின் மோதிரம், தாலி, வெள்ளி சங்கிலி உள்ளிட்டவை அண்மையில் தவற விடப்பட்டிருந்தன.

இதுகுறித்து பக்கிரிசாமி நகர காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்திருந்தாா். இதனிடையே, கொடிக்கால்பாளையத்தைச் சோ்ந்த ராஜ் முகம்மது மற்றும் அவரது குடும்பத்தினா், இந்த பொருள்களை கண்டெடுத்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து இப்பொருள்கள், நகர காவல் ஆய்வாளா் சந்தான மேரி, உதவி ஆய்வாளா் மோகன்ராஜ் முன்னிலையில் பக்கிரிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டன.

Dinamani
www.dinamani.com