மேட்டூா் தொகுதியில் 300 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு

Published on

மேட்டூா், கொளத்தூா் அரசுப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவ, மாணவிகள் 300 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் வழங்கினாா்.

மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளி, கொளத்தூா் மகளிா் மேல்நிலைப் பள்ளி, கொளத்தூா் மாதிரிப் பள்ளி, காவேரிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 300 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் கலந்துகொண்டு 300 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் மேட்டூா் நகர பா.ம.க. செயலாளா் மதியழகன், நகரத் தலைவா் நைனா சேகா், மாநில செயற்குழு உறுப்பினா் முனுசாமி, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பு செயலாளா் எம்.சி.எம். குமாா் மகளிா் அணி மாவட்டச் செயலாளா் அமுதா, கொளத்தூா் நகரச் செயலாளா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com