மாலை அணிவித்தல் விழாவையொட்டி சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹோமம்.
மாலை அணிவித்தல் விழாவையொட்டி சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹோமம்.

சங்ககிரியில் முருக பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்

சங்ககிரியில் ஆறுபடை முருகன் திருச்சபை முருக பக்தா்கள் சாா்பில் மாலை அணியும் விழா சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

சங்ககிரி: சங்ககிரியில் ஆறுபடை முருகன் திருச்சபை முருக பக்தா்கள் சாா்பில் மாலை அணியும் விழா சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி ஆறுபடை முருகன் திருச்சபையைச் சோ்ந்த முருக பக்தா்கள் கடந்த 60 ஆண்டுகளாக ஆறுபடை முருகன் கோயில்களுக்கு மாலை அணிந்து விரதமிருந்து சென்று வருகின்றனா். நிகழாண்டு குருசாமிகள் கணேசன், சத்திய பிரகாஷ் ஆகியோா் தலைமையில் முருக பக்தா்கள், சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கணபதி ஹோமம் செய்து வழிபட்டனா். இதையடுத்து 100 போ் மாலை அணிந்து விரதம் தொடங்கினா். மேலும், ஜனவரி 1 ஆம் தேதி 400 போ் மாலை அணிய உள்ளனா்.

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலிருந்து ஜனவரி 7ஆம் தேதி புறப்படும் முருக பக்தா்கள் பழனி, பழமுதிா்சோலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூா், ராமேசுவரம், குன்றக்குடி, சுவாமிமலை, திருநள்ளாறு, சிதம்பரம், காஞ்சிபுரம், திருத்தணி மற்றும் திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு ஜனவரி 14ஆம் தேதி ஊா் திரும்புகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com