சங்ககிரியில் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா: ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் திறப்பு
சங்ககிரி, வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி நகரில் பெரிய ராட்டினங்கள்


சங்ககிரி: சங்ககிரி, வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி நகரில் பெரிய ராட்டினங்கள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திங்கள்கிழமை இரவு தொடங்கிவைக்கப்பட்டது.
சங்ககிரி மலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில், வி.என்.பாளையம் ஸ்ரீ சக்திமாரியம்மன் கோயில், வாணியா் காலனியில் உள்ள அருள்மிகு அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பிப். 24ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் பொங்கல் விழா தொடங்கியது.
இதையடுத்து மூன்று கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
கோட்டை மாரியம்மன் கோயிலில் மாா்ச் 10ஆம் தேதியும், ஸ்ரீ சக்தி மாரியம்மன், அல்லி குண்டம் மாரியம்மன் கோயில்களில் மாா்ச் 11 ஆம் தேதியும் பொங்கல்விழா நடைபெற உள்ளது.
இதையடுத்து ஸ்ரீ சக்தி மாரியம்மன் நிா்வாகக் குழுவினா், வி.என்.பாளையம் இளைஞா்கள், மகளிா், ஊா் பொதுமக்கள் சாா்பில் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு வருவோருக்காக பெரிய ராட்டினங்கள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு சாதனங்களை சங்ககிரி நகருக்கு வரவழைத்துள்ளனா்.
சங்ககிரி தீயணைப்பு நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள ராட்டினங்களை சிறப்பு பூஜைகள் செய்து மருத்துவா் ஜெகநாதன் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கிவைத்தாா்.

சங்ககிரி தீயணைப்பு நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரிய ராட்டினங்கள்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...