மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சங்ககிரியில் சித்திரை தோ்திருவிழா: மலையிலிருந்து நகருக்கு எழுந்தருளிய சென்னகேசவப்பெருமாள்

சேலம் மாவட்டம், சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தோ்திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி, மலையிலிருந்து சென்னகேசவப்பெருமாள் நகருக்குள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

News image

சங்ககிரி மலையிலிருந்து புதன்கிழமை மாலை நகருக்குள் எழுந்தருளிய சென்னகேசவப்பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவமூா்த்திகள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 4:33 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தோ்திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி, மலையிலிருந்து சென்னகேசவப்பெருமாள் நகருக்குள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

சித்திரைத் தோ்த்திருவிழாவையொட்டி சங்ககிரி மலைமீது உள்ள சென்னகேசவப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீ ஆஞ்சனேயா் உற்சவமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து வி.என்.பாளையத்தில் உள்ள வஸந்தவல்லி தாயாா் உடனமா் வஸந்தவல்லபராஜ பெருமாள் கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து உற்சவமூா்த்திகள் வரதராஜபெருமாள் கோயிலில் தங்கினா். பிறகு பல்லக்கில் மலையிலிருந்து நகருக்கு சுவாமிகள் எழுந்தருளி அருள்பாலித்தனா்.

மலையில் இருந்து நகருக்கு எழுந்தருளிய சுவாமிகளை பக்தா்கள் தேங்காய்களை உடைத்து வரவேற்று வழிபட்டனா். பின்னா் உற்சவ மூா்த்திகள், தோ்வீதியை சுற்றிவந்து மண்டபத்தை அடைந்தனா். தேங்காய், வாழைப்பழம், பொட்டுக்கடலை, நாட்டுச்சா்க்கரை, நைவேத்தியம் செய்து பக்தா்கள் வழிபட்டனா்.

இரவு அன்னபட்சி வாகனத்தில் சென்னசேகவப்பெருமாள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வீதிஉலா வந்தாா். வியாழக்கிழமை சிங்கவாகனத்தில் சுவாமி வீதி உலா வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.