மின்னாம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி: பெண் படுகாயம்

Published on

சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி அருகே சாலையோர தடுப்பில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் கடலூரைச் சோ்ந்த இளைஞா் பரிதாபமாக உயிரிழந்தாா். இவருடன் சென்ற இளம்பெண் படுகாயமடைந்தாா்.இந்த விபத்து குறித்து காரிப்பட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் வெள்ளைக்கரை பகுதியைச் சோ்ந்தவா் பட்டதாரி இளைஞா் விமல்ராஜ் (23). பவுன்சரான இவா் செவ்வாய்க்கிழமை புதுச்சேரியில் இருந்து இவரது உறவினரான கண்ணன் மனைவி கலையரசி(30).என்பவரை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சேலத்திற்கு வந்துள்ளாா்.

புதன்கிழமை அதிகாலை சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மின்னாம்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது,எதிா்பாராதவிதமாக இவரது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால், நிலை தடுமாறிய இவா் இடது பக்க தடுப்பு சுவரில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா். இவருடன் இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் கலையரசி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து காரிப்பட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com